Total Pageviews

Search This Blog

"லிவிங்க் டூ கெதர்" | நமது திருமண உறவுகளை வெகுவாக பாதித்துள்ளது | கேரள உயர் நீதிமன்றம்

"யூஸ் அண்ட் த்ரோ" நுகர்வு கலாசாரம் நமது திருமண உறவுகளை வெகுவாக பாதித்துள்ளது என்று கேரள உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்து ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


கேரள உயர் நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி கணவனால் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு ஒன்று நீதிபதிகள் முகமது முஸ்டாக், சோபி தாமஸ் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கினை விசாரித்த நீதிபதிகள் அளித்த தீர்ப்பு: சாதாரணச் சண்டைகள், பிணக்குகள், உணர்ச்சி கொந்தளிப்பில் எடுக்கும் முடிவுகளை விவாகரத்துக்கான காரணமாக சொல்லக்கூடாது


சின்னச்சின்ன சண்டைகள், சுயநலம், திருமணத்தை மீறிய உறவு போன்றவைகளால், குழந்தைகளைக்கூட கவனத்தில் கொள்ளாத அளவிற்கு தடுமாறி வருகிறது. இன்றைய இளைய தலைமுறையினர் திருமணம் ஒரு தீமையைப் போல கருதுகிறார்கள். பொறுப்புகள் இல்லாத சுதந்திரமான வாழ்க்கையை வாழ்வதற்கு திருமணம் தடையாக இருக்கும் என்று நினைக்கின்றனர்.


‘WIFE’ என்ற வார்த்தையின் ‘Wise Investment For Ever’ என்ற அர்த்தத்தை ‘Worry Invited For Ever’ என்று மாற்றியிருக்கின்றனர். நுகர்வு கலாசாரத்தின் யூஸ் அண்ட் த்ரோ பண்பும் நமது திருமண பந்தத்தை வெகுவாக பாதித்திருக்கிறது. அதிகரித்து வரும் லிவிங்க் டூ கெதர் கலாச்சாரத்தால் இணையர்கள் தங்களுக்குள் சிறிது இடைவெளியை உணரும் நிலையில் மிக எளிதாக "குட் பை" சொல்லிவிடுகிறார்கள் என்று வேதனை தெரிவித்திருந்தானர்.


இறையுணர்வும் சட்டமும் திருமணத்தை ஒரு குடும்ப அமைப்பாக பார்க்கின்றன. அதனால் சம்பந்தப்பட்டவர்கள் தாங்கள் பிரிந்து செல்வதற்கான சட்டரீதியான காரணங்களை கண்டறியும் வரை இந்த திருமண உறவில் இருந்து பிரிந்து செல்லக்கூடாது என்று தங்களது தீர்ப்பில் தெரிவித்திருந்தனர்.



No comments:

Post a Comment

Definition of State in Article 12 of the Constitution, It include judici...

  https://youtu.be/kihV9D5FrfI in English tamil hindi தமிழ் हिन्दी  தமிழ் : 00:09:09 - அரசியலமைப்பின் 12வது பிரிவில் அரசின் வரையறையின் நோக்...

Followers