19/08/2023 Tamilnadu district civil judge exam question and answers PDF free download
கிரிமினல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரை எப்போது விடுவிக்க முடியும்? உச்சநீதிமன்றம் விளக்குகிறது
நீதிபதி கங்காபூர்வாலாவை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்தது மத்திய அரசு
ஆசிரியர் பணியின் நோக்கம் வசதியான இடத்தில் பணி பெறுவது அல்ல, Chennai High court
இரண்டாவது கணவரிடம் இருந்து பராமரிப்பை கோர முடியாது, MP HC விதிகள்
தமிழ்நாடு உச்சநீதிமன்ற நீதிபதி கே.வி. விஸ்வநாதனின் வாழ்க்கைப் பின்னணி
68 குஜராத் நீதித்துறை அதிகாரிகளின் பதவி உயர்வை எஸ்சி நிறுத்தியது.
ஆளுநர் vs டெல்லி அரசு வழக்கு | நிர்வாக சேவைகளில் மாநில அரசுக்கே அதிகாரம் - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
புதுடெல்லி: டெல்லி யூனியன் பிரதேசத்தின் நிர்வாக சேவைகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கே அதிகாரம் உண்டு என்றும், அதன் முடிவுக்கு மாநில ஆளுநர் கட்டுப்பட வேண்டும் என்றும் அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டுள்ளது.
நாட்டின் தலைநகராகவும் யூனியன் பிரதேசமாகவும் இருக்கும் டெல்லியில், காவல்துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. டெல்லியின் பாதுகாப்பு, அங்கு பொது நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிப்பது உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களும் மத்திய அரசு வசம் உள்ளது. இந்நிலையில், டெல்லி யூனியன் பிரதேசத்தின் அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கே உண்டு என்றும், இதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கோரி டெல்லி மாநில உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஆளும் ஆம் ஆத்மி அரசு தொடர்ந்த இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், வழக்கை 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி கடந்த ஆண்டு மே மாதம் 6-ம் தேதி உத்தரவிட்டது. அதிகாரத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது யார் என்ற விவாதம் எழுந்துள்ளதால் இந்த விவகாரத்தை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வின் அதிகாரப்பூர்வமான தீர்ப்புக்காக பரிந்துரைப்பதே பொருத்தமானதாக இருக்கும் என்று அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு தெரிவித்திருந்தது.
இந்தநிலையில், இந்த வழக்கில் 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு, நிர்வாக சேவைகளில் டெல்லி அரசிடமே அதிகாரம் இருக்க வேண்டும் என்றும், மாநில ஆளுநர் அதற்கு கட்டுப்பட வேண்டும் என்றும் அரசியல் சாசன அமர்வு ஒருமனதாக இன்று (மே 11) தீர்ப்பளித்துள்ளது. அதன் விபரம்: "டெல்லியின் நிர்வாக சேவைகள் உள்ளிட்டவற்றில் மாநில அரசு மற்றும் ஆளுநரில் யாருக்கு அதிகாரம் இருக்கிறது என்ற வழக்கில் நீதிபதி அசோக் பூஷன் 2019ம் ஆண்டு வழங்கிய தீர்ப்பில் இந்த அமர்வு உடன்படவில்லை. மக்கள் விருப்பத்தை பிரதிநிதித்துவப்படுத்த சட்டமியற்றும் அதிகாரம் டெல்லி சட்டபேரவைக்கு வழங்கப்பட்டுள்ளது. ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சி என்பது அடிப்படைக் கட்டமைப்பின் ஒரு பகுதியாகும். கூட்டாட்சி என்பது உயிர்வாழ்வதற்கான பல்வேறு நலன்களை உறுதி செய்கிறது மற்றும் தேவைகளுக்கு இடமளிக்கிறது.
ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதன் அதிகாரிகளைக் கட்டுப்படுத்தும், கேள்வி கேட்கும் அதிகாரம் இல்லை என்றால் அந்த அரசுக்கு சட்டமன்றம் மற்றும் பொதுமக்கள் மீதான பொறுப்பு நீர்த்துப்போகும். எந்த ஒரு அதிகாரியும் அரசாங்கத்திற்கு கட்டுப்பட வேண்டிய தேவை இல்லையென்றால் கூட்டுப்பொறுப்பு என்பது இல்லாமல் போய்விடும். எந்த ஒரு அதிகாரியும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசால் தான் அவமானப்படுத்தப்பட்டதாக உணரும்போது அவர்கள் அரசுக்கு கட்டுப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கலாம். அதிகாரிகள் அமைச்சர்களுக்கு பதில் அளிக்க வேண்டிய தேவையில்லை என்று நினைத்தால், அவர்களின் வழிகாட்டுதல்களை ஏற்க மறுத்தால் கூட்டுப்பொறுப்பின் கொள்கைகள் பாதிக்கப்படும்.
மத்திய அரசை பிரதிநிதித்துவப்படுத்தும் துணை நிலை ஆளுநர், சேவைகள் குறித்து தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முடிவுகள் மற்றும் அதன் அமைச்சரவை குழுவின் ஆலோசனைகளுக்கு கட்டுபட்டவர். குடியரசுத் தலைவரால் வழங்கப்பட்டுள்ள நிர்வாக அதிகாரங்கள் துணைநிலை ஆளுநருக்கு உண்டு என்றாலும் அது ஒட்டுமொத்த டெல்லி அரசின் நிர்வாகத்தினை கட்டுப்படுத்தாது. அப்படி இல்லையென்றால் டெல்லியை ஆளுவதற்கு தனியாக ஒரு நிர்வாக அமைப்பினைத் தேர்ந்தெடுத்ததற்கான அர்த்தம் இல்லாமல் போய்விடும்" இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு ஆம் ஆத்மி அரசுக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.
ஒரு குற்றவியல் விசாரணையின் நீதிபதி வழக்கை பார்வையாளராகவோ அல்லது அவர்பதிவு செய்யும் இயந்திரமாகவோ இருக்கக் கூடாது,
Definition of State in Article 12 of the Constitution, It include judici...
https://youtu.be/kihV9D5FrfI in English tamil hindi தமிழ் हिन्दी தமிழ் : 00:09:09 - அரசியலமைப்பின் 12வது பிரிவில் அரசின் வரையறையின் நோக்...

-
பெண்கள் தங்களை நிரூபிக்க 120% கொடுக்க வேண்டும் என்ற சூழல் வழக்கறிஞர் தொழிலில் உள்ளது. 100% செய்தால் மட்டும் போதாது... பேச்சுவார்த்தையில் பெ...
-
நீதிமன்றங்கள் செயல்படும் மொழியை ஆங்கிலத்தில் இருந்து இந்திக்கு மாற்றும் திட்டம் எதுவும் இல்லை என்று வியாழக்கிழமை மாநிலங்களவையில் அரசு தெரிவி...
-
அரசியல் சாசனம் வழங்கியுள்ள பேச்சுரிமை என்பது பிறரை இழிவுபடுத்தி வசைபாடுவதற்கு அல்ல என அலகாபாத் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. உத்தரப் பிரத...
-
தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும், 2024 ஆம் ஆண்டில் அரசுத்துறை பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு அறிவிப்புகள் வெளிவந்த வண்ணம் உள்ளத...
-
BHARATIYA NAGARIK SURAKSHA SANHITA, 2023 CHAPTER XVI - COMPLAINTS TO MAGISTRATES Section 223 - Examination of complainant , Section 224 - ...
-
The general rule of tort liability is that the person who causes damage must pay compensation. In certain cases, however, liability can ari...
-
1969 ஆம் ஆண்டு பிறப்பு மற்றும் இறப்பு பதிவுச் சட்டத்தை முதன்முறையாக திருத்த மசோதா முயல்கிறது. அதன் “பொருள்கள் மற்றும் காரணங்களின் அறிக்கையி...
-
CHAPTER 3 - GENERAL EXCEPTIONS - Bharatiya Nyaya Sanhita, 2023 - 2024 (BNS) Section 14 - Act done by a person bound, or by mistake of fact...
-
(BNS) Bharatiya Nyaya Sanhita 2023, in English, Tamil, Hindi Section 33. Act causing slight harm Nothing is an offence by reason that it c...
-
ஆட்கொணர்வு வழக்கில் தனது காதலி பெற்றோருடன் செல்ல முடிவெடுத்ததை அடுத்து, கேரள உயர்நீதிமன்றத்தில் இளைஞர் ஒருவர் தனது மணிக்கட்டை அறுத்துக் கொள்...
-
▼
2025
(27)
-
▼
July 2025
(16)
- Definition of State in Article 12 of the Constitut...
- The doctrine of Severability, The doctrine of Ecli...
- Citizenship under the Constitution of India, Who a...
- Which citizenship can be acquired and terminated u...
- Aadhaar Card Not Proof Of Citizenship | Election C...
- Preamble, Meaning and importance of the Preamble
- 'Committing Adultery' Distinct From Living In Adul...
- How a new state can be formed?, What is the proced...
- Father dies without writing a "will" - Will a marr...
- Nature of Indian Constitution / federal in charact...
- Salient features of Indian Constitution in English...
- Types in the lease documents ? Is there a differen...
- Before buying a property that has been divided int...
- 'Arrest Cannot Be Mechanical, Dignity Must Be Reco...
- Individual's Phone Can't Be Tapped To Uncover Susp...
- how to divide property without a will ?
- ► March 2025 (1)
- ► February 2025 (6)
- ► January 2025 (2)
-
▼
July 2025
(16)
-
►
2024
(241)
- ► December 2024 (7)
- ► October 2024 (4)
- ► September 2024 (7)
- ► August 2024 (28)
- ► April 2024 (7)
- ► March 2024 (11)
- ► February 2024 (4)
- ► January 2024 (12)
-
►
2023
(491)
- ► December 2023 (24)
- ► November 2023 (2)
- ► October 2023 (1)
- ► September 2023 (50)
- ► August 2023 (101)
- ► April 2023 (24)
- ► March 2023 (36)
- ► February 2023 (28)
- ► January 2023 (175)
-
►
2022
(535)
- ► December 2022 (137)
- ► November 2022 (52)
- ► October 2022 (160)
- ► September 2022 (127)
- ► August 2022 (32)