Total Pageviews

Search This Blog

கருப்பு அங்கி, இது வெறும் அங்கி இல்லை சமூக நீதிக்கான கவசம்

இந்த அங்கியை வழக்கறிஞர்களுக்கு
அறிமுகப்படுத்தியது இங்கிலாந்து
நாடு. இந்த அங்கி ஒரு பட்டம் போன்றது இந்த பட்டத்தை பெற்று
வழக்கறிஞர் என்று நெஞ்சை நிமிர்த்தி
நடக்கவேண்டும் என்கின்ற கனவுக்காகவே சட்டபடிப்பு படித்து வழக்கறிஞர்களாக உருவானவர்கள்
ஏராளம்.
இந்த அங்கியை அணிந்தபடி
ஒரு முறை எனக்காக நீங்கள் நீதிபதியின் காதில் நன்றாக விழும்படி
கம்பீரமாக பேசினால் போதும்
எனக்கு நீதி கிடைக்காவிட்டாலும்
என் மனம் நிம்மதி அடையும்
என்று நினைக்கும் வழக்காடிகள்
ஏராளம்.

என் மகன் என் சகோதரன் என் கணவன் இந்த கருப்பு அங்கியை அணிந்துகொண்டு நீதிமன்றத்தில்
யாரோ ஒருவரின் விடுதலைக்காக
வழக்கை‌ நடத்துகிறார் என்கின்ற
திருப்தி ஒன்று மட்டுமே நிறைய வழக்கறிஞர் குடும்பங்களில் மன
நிம்மதியை ஏற்படுத்தி வருகிறது.

கருப்பு அங்கியில் ஒரு வழக்கறிஞன்
கம்பீரமாகிறான் 
சமூக விடுதலைக்கான சிந்தனை
அவன் மனதில் கொழுந்து விட்டு
எழ‍ அந்த கருப்பு அங்கி அவனுக்கு
உதவுகிறது.

ஒவ்வொரு நீதிபதியும் வழக்கறிஞராக
இந்த கவசத்தை அணிந்து
வழக்கறிஞர் தொழிலை மேற்கொண்டு விட்டு தான்
இன்று நீதிபதியாக அமர்ந்திருக்கிறார்கள்.ஆனால்
அவர்கள் அதை மறந்து
விடுகிறார்கள்.

ஒரு சிறந்த வழக்கறிஞரால் தான்
ஒரு சிறந்த நீதிபதியாக முடியும்.
வழக்கறிஞராக இருந்து கட்சிகாரர்களின் உணர்வுகளை 
கேட்காமல் அவர்களின் உரிமைகளுக்காக நீதிமன்றங்களில்
போராடாமல் வழக்கறிஞர் தொழிலை
நேசித்துவிட முடியாது.
வழக்கறிஞர் தொழிலை நேசிக்க
மறந்தவர்களை நீதிபதிகளாக அமர்த்தபடுகின்ற பொழுது தான்
அவர்களின் வழக்கறிஞர் மீதான ஏளன பார்வையை நம்மால் பார்க்க
முடிகிறது.

சமூக விடுதலையை
பெற்றுத்தரும் தொழில் இந்த
வழக்கறிஞர் தொழில்

அந்த தொழிலின் உயிர் கவசம்
இந்த கருப்பு அங்கி
ஒவ்வொரு வழக்கறிஞரும் அவர்களின் கருப்பு அங்கியை
விட்டுகொடுத்துவிடக்கூடாது.

கருப்பு அங்கி என்பது நீதித்துறையின்
ஒரு அங்கம் 
அதை அவமதிப்பதோ
அலட்சியப்படுத்துவதோ 
நீதிமன்ற அவமதிப்பு செயலாக
கருதப்பட வேண்டும்

No comments:

Post a Comment

Definition of State in Article 12 of the Constitution, It include judici...

  https://youtu.be/kihV9D5FrfI in English tamil hindi தமிழ் हिन्दी  தமிழ் : 00:09:09 - அரசியலமைப்பின் 12வது பிரிவில் அரசின் வரையறையின் நோக்...

Followers