Total Pageviews

Search This Blog

இந்திய சட்டம் குற்றவியல் (திருத்த) சட்டம், 2013 / The Indian Penal Code (Amendment) Act, 2013


Join: https://whatsapp.com/channel/0029Va9tkDP4CrfefciWJN0y

* ஆசிட் தாக்குதல், பாலியல் துன்புறுத்தல், பார்வை பாலியல் துன்புறுத்தல், ஒரு பெண்ணின் ஆடைகளைக் களைதல் மற்றும் பின் தொடர்தல் போன்ற புதிய குற்றங்கள் இந்தியத் தண்டனைச் சட்டத்தில் சேர்க்கப்பட்டன.


* பாலியல் பலாத்காரம், பாலியல் துன்புறுத்தல், பின்தொடர்தல், ஆசிட் தாக்குதல்கள், வார்த்தைகள் மற்றும் முறையற்ற வகையில் தொடுதல், அநாகரிகமான சைகை செய்தல்கள் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன.


* பாலியல் பலாத்காரம் என்பதற்கான வரையறையில், வாய்வழி பாலுறவு, புணர்ச்சியற்ற பாலுறவும் சேர்க்கப்பட்டு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.


* கூட்டுப் பாலியல் பலாத்காரத்தில், ஒரு பகுதியில் நிறுத்தப்பட்டிருக்கும் ஆயுதப்படையைச் சேர்ந்த உறுப்பினரால் செய்யப்படும் பாலியல் பாலத்காரமும், வகுப்புவாத அல்லது இனவாத வன்முறையின் போது அல்லது சம்மதம் தெரிவிக்க இயலாத நிலையில் உள்ள ஒரு பெண்ணின் மீது செய்யப்படும் பாலியல் பாலத்காரமும் சேர்க்கப்பட்டு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.


* கூட்டுப் பாலியல் பலாத்காரம் மற்றும் கூட்டுப் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவர் உணர்வற்ற நிலைக்கு செல்லும் வகையிலான பலாத்காரம் ஆகியவற்றுக்கான தண்டனைகள், ஆயுள் தண்டனை மற்றும் மரண தண்டனையாக அதிகரிக்கப்பட்டுள்ளன.


* அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், ஆசிட் தாக்குதல் மற்றும் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக இலவச முதலுதவி அல்லது மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டியதும், உடனடியாக அந்த நிகழ்வைப் பற்றி காவல் துறைக்குத் தகவல் அளிக்க வேண்டியதும் கட்டாயமாக்கப்பட்டது.


* சுரண்டல் – உடல்ரீதியான சுரண்டல் அல்லது எந்தவொரு வடிவிலான பாலியல்ரீதியான சுரண்டல், அடிமைத்தனம், கொத்தடிமை, அல்லது கட்டாயப்படுத்தி உடலுறுப்புகளை எடுத்தல் ஆகியவற்றுக்காக குழந்தைகள் கடத்தப்படுதல் உள்ளிட்ட ஆள் கடத்தல் தடுப்பு நடவடிக்கைகள்.

Join: https://whatsapp.com/channel/0029Va9tkDP4CrfefciWJN0y

குற்றவியல் சட்டச் செயல்

வீட்டு வன்முறையிலிருந்து பெண்களுக்குப் பாதுகாப்பு சட்டம் 2005


2005 ஆம் ஆண்டு, வீடு வன்முறையில் இருந்து பெண்களைப் பாதுகாப்பதற்காக வீட்டு வன்முறையிலிருந்து பெண்களுக்குப் பாதுகாப்பு சட்டம், 2005 இயற்றப்பட்டது. இந்த சட்டமானது’வீட்டு வன்முறை’யை, உடல் ரீதியான வன்முறை மட்டுமல்லாமல், கூடவே உணர்வு ரீதியாக/சொற்கள் சார்ந்த, பாலியல் ரீதியாக, மற்றும் பொருளாதார ரீதியான வன்கொடுமையையும் உள்ளடக்கியது என வரையறையளிக்கிறது. வீட்டு வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு ஆணைகள் உள்ளிட்ட சேவைகளையும், ஆதரவையும் இந்த சட்டம் வழங்குகிறது.


* கணவர் அல்லது ஆண் லிவ்-இன் துணைவர் அல்லது அவருடைய உறவினர்களால் செய்யப்படும் வீட்டு வன்முறையிலிருந்து மனைவிக்கு, அல்லது பெண் லிவ்-இன் துணைவிக்குப் பாதுகாப்பு வழங்குகிறது, மேலும் இந்த சட்டம் தன்னுடைய பாதுகாப்பை, சகோதரிகள், விதவைகள் அல்லது தாய்மார்கள் போன்ற வீட்டில் வசிக்கும் மற்ற பெண்களுக்கும் விரிவுபடுத்தியுள்ளது.


* ‘வீட்டு வன்முறை’ என்பதற்கான வரையறையில், எந்த வித வரதட்சணை அல்லது மற்ற சொத்துக்கள் அல்லது ஆஸ்திகளை கோருகின்ற சட்ட விரோதக் கோரிக்கைக்காக செய்யப்படுகின்ற உடல் ரீதியான, பாலியல் ரீதியான, சொற்கள் ரீதியான, உணர்வுரீதியான அல்லது பொருளாதார ரீதியான துன்புறுத்தலும், அதற்கான மிரட்டலும் இந்த வரையறையில் சேர்க்கப்பட்டுள்ளன.


* ஒரு பங்கிடப்பட்ட வீட்டில் வசிப்பதற்கு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிமை உள்ளது, அது பாதிக்கப்பட்ட நபருக்கும் எதிராளிக்கும் சேர்ந்து சொந்தமான வீடாகவோ அல்லது வாடகை வீடாகவோ, அல்லது தனியே சொந்த வீடாகவோ அல்லது வாடகை வீடாகவோ இருக்கலாம், ஆனால் இது சம்பந்தமாக உரிமை, அல்லது சமபங்கு அல்லது கூட்டு குடும்பத்தின் வீடு, அதில் எதிராளி உறுப்பினராக இருக்கிறார், பாதிக்கப்பட்ட நபர் அல்லது எதிராளிக்கு ஒரு உரிமையும் இல்லாதவாறு இருக்கின்ற வீடாக இருக்க வேண்டும்.


* பகிரப்பட்ட வீட்டிலிருந்து எதிராளி வெளியேற்றப்படுவதற்கோ அல்லது மாற்று தங்குமிடத்தைப் பெறுவதற்கோ அல்லது அதற்கான வாடகை செலுத்துவதற்கோ வழி காட்டப்படும்.


* இந்த சட்டத்தின் கீழ், பாதுகாப்பு ஆணைகள், குடியிருப்பு ஆணைகள், பண நிவாரணம், காவல் ஆணைகள் மற்றும் இழப்பீடு கோரி மனுத்தாக்கல் செய்வதற்கு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிமையுண்டு.


* வன்முறை தொடர்பான வழக்குகளின் விசாரணைகளை நடத்துவதற்கும், நேர்மறையான அணுகுமுறையுடன் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் ஒரு முக்கியப் பங்கு வகிப்பதற்கும், மாநில அரசால் பாதுகாப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த சட்டமானது, பாதிக்கப்பட்டவரின் மருத்துவப் பரிசோதனை, சட்டரீதியான உதவியைப் பெறுதல், பாதுகாப்பான தங்குமிடம் ஆகிய விஷயங்களில் அவருக்கு உதவியளிப்பதற்காக, சேவை வழங்குநர்களாக செயல்படுவதற்கான அங்கீகாரத்தை அரசு சார்பற்ற அமைப்புகளுக்கும் வழங்குகிறது.


வீட்டு வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாத்தல் சட்டம் 


செயல்கள் / விதிகள் / ஆலோசகர்கள் / தீர்ப்புகள்


பணியிடத்தில் பெண்களுக்கெதிரான பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, பாதுகாப்பு மற்றும் நிவாரணம்) சட்டம், 2013


பணியிடத்தில் பெண்களுக்கெதிரான பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, பாதுகாப்பு மற்றும் நிவாரணம்) சட்டம், 2013 பணியிடத்தில் பெண்களுக்கெதிரான பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, பாதுகாப்பு மற்றும் நிவாரணம்) சட்டம், 2013. இந்த சட்டமானது, பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலில் இருந்து பெண்களுக்குப் பாதுகாப்பு அளித்து, பாதுகாப்பான மற்றும் பத்திரமான சூழ்நிலையை உருவாக்குவதற்காக 2013 ஆண்டு ஆண்டு அமல்படுத்தப்பட்டது. இந்த சட்டம், முறைசார் மற்றும் முறைசாராத் துறைகள் உள்ளிட்ட எந்த ஒரு நிறுவனம், அரசு மற்றும் பொதுத் துறைகளுக்கும் பொருந்துகிறது. இது, ஒரு பெண்ணின் வேலைவாய்ப்புகளுக்காக மறைமுகமான அல்லது வெளிப்படையான வாக்குறுதி அல்லது மிரட்டல், அல்லது அவருடைய ஆரோக்கியம் அல்லது பாதுகாப்பைப் பாதிக்கக் கூடிய வகையில் விரோதமான பணிச்சூழலை உருவாக்குதல் அல்லது அவமானகரமாக நடத்துதல் ஆகிய சூழ்நிலைகளையும் சேர்ந்தது என பணியிடத்தில் செய்யப்படும் பாலியல் துன்புறுத்தலுக்கான விரிவான வரையறையை அளிக்கிறது. இது, வயது அல்லது பதவி நிலையைப் பொருட்படுத்தாமல், அமைப்புசார் அல்லது அமைப்புசாரா துறைகளில் இருந்தாலும், அரசு அல்லது தனியார் துறையாக இருந்தாலும் வாடிக்கையாளர்கள் உள்ளிட்ட அனைத்துப் பெண்களுக்கும் பாதுகாப்பளிக்கிறது. வீட்டுப் பணியாளர்களும் இந்த சட்டத்தின் எல்லைக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். பணியிடம் என்பது, போக்குவரத்து உட்பட வேலை நேரத்தின் போது பணியாளர் செல்கின்ற எந்த ஒரு இடமும் என விரிவுபடுத்தப்படுகிறது. உள்ளார்ந்த புகார்கள் குழு (ஐ.சி.சி) மற்றும் உள்ளூர் புகார்கள் குழு (எல்.சி.சி) ஆகியவற்றின் வடிவத்தில் ஒரு நிவாரண செயல்முறையை இந்த சட்டம் வழங்குகிறது. உரிமையாளருக்கு இந்த சட்டம் பாலியல் துன்புறுத்தல்கள் இல்லாத சூழ்நிலையை உருவாக்க வேண்டிய பொறுப்பை வழங்குகிறது. உரிமையாளர்கள், இந்த சட்டத்தின் விதிகளைப் பற்றிப் பணியாளர்கள் அறிந்து கொள்வதற்காக, முறையான இடைவெளிகளில் ஒர்க்ஷாப்களையும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்த வேண்டும், மற்றும் உள்ளார்ந்த குழுவின் அரசியல் நிர்ணயம் மற்றும் பாலியல் துன்புறுத்தலுக்கான தண்டனை விவரங்கள் பற்றிய அறிவிப்புகளைக் காட்ட வேண்டும்.


Join: https://whatsapp.com/channel/0029Va9tkDP4CrfefciWJN0y

No comments:

Post a Comment

Definition of State in Article 12 of the Constitution, It include judici...

  https://youtu.be/kihV9D5FrfI in English tamil hindi தமிழ் हिन्दी  தமிழ் : 00:09:09 - அரசியலமைப்பின் 12வது பிரிவில் அரசின் வரையறையின் நோக்...

Followers