Total Pageviews

Search This Blog

*நிலப்பட்டா உரிமை, போலி பத்திரத்தை ஆன்லைனில் கண்டுபிடிக்கலாமா? தமிழக அரசு*

 

*நிலப்பட்டா உரிமை, போலி பத்திரத்தை ஆன்லைனில் கண்டுபிடிக்கலாமா? தமிழக அரசு*


த்திரப்பதிவுகளில் நடக்கும் மோசடிகளை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.. அதில் ஒருசிலவற்றை பார்ப்போம்.

போலி பத்திரங்களை தயார் செய்து நடக்கும் மோசடிகள் பெருகிக்கொண்டே இருக்கின்றன.. எனவேதான், பத்திரப்பதிவுத்தலைவரே, போலி பத்திரப்பதிவை ரத்து செய்யும் வகையில் அதிகாரம் வழங்கும் சட்ட மசோதா, சட்டசபையில் இயற்றப்பட்டிருக்கிறது.
 

 

இதைத்தவிர, பதிவு செய்ய வரும் ஆவணங்களில், பதியப்படும் சொத்துக்கள் குறித்த போட்டோக்களும், ஆவணமாகவே இடம்பெற வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியிருக்கிறது.

காலி இடங்கள்: ஏனென்றால், காலி நிலம் என்று சொல்லி, கட்டிடத்தை மறைத்து, பத்திரப்பதிவு ஆங்காங்கே நடக்கிறதாம்.. எனவேதான், காலி நிலங்களின் புகைப்படத்தை பத்திரத்தில் இணைக்க சொல்கிறார்கள்..

காலி நிலம் மட்டுமல்லாமல், பதிவுக்கு வரும் ஆவணங்களில் பதியப்படும் சொத்துக்கள் குறித்த போட்டோவும் ஆவணமாக இருக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டிருக்கிறது.. இவ்வளவு இருந்தாலும், மோசடிகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன..

அப்படியானால், போலி பத்திரங்களை எப்படித்தான் கண்டுபிடிப்பது? இதற்கு சில வழிமுறைகள் உள்ளன.. குறிப்பாக, பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கும் விவரங்களை பயன்படுத்தி, சொத்து பதிவு செய்யப்பட்டுள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் நகல் வேண்டி விண்ணப்பிக்கலாம்... இந்த இரண்டையும் ஒப்பிட்டு பார்த்தாலே, போலி பத்திரத்தை கண்டுபிடித்து விடலாம்.


முத்திரைத்தாள்: அல்லது முத்திரைத்தாள் வாங்கிய தேதி, முதல் முத்திரைத்தாளின் பின் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கும் பதிவு விவரங்கள் போன்றவற்றை வைத்தும் போலி பத்திரங்களை கண்டுபிடிக்கலாம்.. அதேபோல, சொத்தின் மூலப்பத்திரங்கள் வைத்தும் ஓரளவு போலி பத்திரங்களை கண்டுபிடிக்கலாம்.

ஆன்லைனிலும் இதற்கு வழி உண்டு.. http://ecview.tnreginet.net/ என்ற வெப்சைட்டிற்குள் சென்றால், உங்களுக்கு தேவையான விவரங்களை பெற்றுக் கொள்ளலாம். அத்துடன், உங்கள் நிலத்தின் உண்மைத்தன்மையையும் நீங்கள் எளிதாக அறிந்து கொள்ளலாம்.

வெப்சைட்: அதாவது, இந்த வெப்சைட்டிற்குள் நுழைந்து, சப்-ரிஜிஸ்டர் அலுவலகம், பத்திரம் எண், பதிவு செய்த வருடம் போன்ற இந்த 3 தகவல்களையும் பிழையின்றி பதிவு செய்தால், பத்திரம் குறித்த உண்மையான தகவல்கள் தெரியவரும்.. அந்த பத்திரம் யார் பெயரில் இருக்கிறது? உங்கள் நிலம் உங்கள் பெயரில்தான் இருக்கிறதா? என்பது குறித்தெல்லாம் நேரடியாகவே நீங்கள் அறிந்து கொள்ளலாம். https://eservices.tn.gov.in/eservicesnew/land/chitta_ta.html?lan=ta

வீடியோ ஆதாரம்: 2 மாதங்களுக்கு முன்புகூட, சொத்து விற்பனையில் முறைகேடு ஏற்படாமல் தடுக்க, தமிழக அரசு ஒரு முறையை கொண்டுவந்திருக்கிறது.. அதாவது, நீங்கள் பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு வந்து, பத்திரங்களை பதிவு செய்துவிட்டு கிளம்பும்வரை, எல்லாமே அங்கிருக்கும் சிசிடிவியில் வீடியோவாக பதிவாகிவிடுமாம்.. இந்த வீடியோ பதிவினை, சம்பந்தப்பட்டவர்களுக்கு வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்பட்டுவிடும்...

இந்த வீடியோவை, MX PLAYER,VLC PLAYER என்ற ஆப்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். Mini player செயலியை டவுன்லோடு செய்து ஒலி, ஒளியுடன் காணலாம்.

நடவடிக்கை: இதன்மூலம், யாருடைய சொத்தையும் யாரும் உரிமை கொண்டாட முடியாது.. சொத்தை விற்பனை செய்துவிட்டு, அதை நான் விற்கவில்லை, போலி கையெழுத்து போட்டுவிட்டார்கள் என்று சொல்வதை இனி தடுக்க முடியும்... வீடியோவை எடுத்து போட்டு காட்டி நீங்கள்தானே விற்றீர்கள் என்று பதிவுத்துறையினர் கேட்கவும் முடியும்.

No comments:

Post a Comment

Definition of State in Article 12 of the Constitution, It include judici...

  https://youtu.be/kihV9D5FrfI in English tamil hindi தமிழ் हिन्दी  தமிழ் : 00:09:09 - அரசியலமைப்பின் 12வது பிரிவில் அரசின் வரையறையின் நோக்...

Followers