தமிழக போலீஸீல் 54 ரிப்போர்ட்டர் பணியிட அறிவிப்பு., இந்த தேதி முதல் விண்ணப்பம்?

 


தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும், 2024 ஆம் ஆண்டில் அரசுத்துறை பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு அறிவிப்புகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இதனால் அரசு துறைகளில் பணிபுரிய ஆர்வம் உள்ள பலரும், தேர்வுகளுக்கு மும்முரமாக தயாராகி வருகின்றனர். இந்த சூழலில் தமிழ்நாடு போலீஸ் சுருக்கெழுத்து பணியகம் சார்பில் 54 ஜூனியர் ரிப்போர்ட்டர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட் அறிவிப்பு – அமைச்சரவை ஒப்புதல்!

இந்த தேர்வில் கலந்து கொள்வதற்கு 12ஆம் வகுப்பு தேர்ச்சி, அரசு சுருக்கெழுத்து தேர்வு தேர்ச்சி போன்ற தகுதிகளை பெற்றிருக்க வேண்டும். அதன்படி தகுதியான தேர்வர்கள், இன்று (மார்ச் 15) முதல் ஏப்ரல் 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தி உள்ளனர். கூடுதல் விவரங்களுக்கு மேலே இணைக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்த்துக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment